சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை அருகே உள்ள வடகரை திடீர் நகரை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் சுதாகர் (வயது20). தொழிலாளி. இவர் 17 வயது சிறுமி ஒருவரை கடந்த 11-ந் தேதி ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று, திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் குழந்தைகள் திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமியை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story