வேன் கவிழ்ந்து விபத்து; தம்பதி படுகாயம்
வேன் கவிழ்ந்து விபத்து; தம்பதி படுகாயம்
நல்லூர்
திருப்பூர் செவந்தாம்பாளையத்தில் இருந்து தாராபுரம் சாலையை நோக்கி பனியன் துணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வேன் வேகமாக வந்துள்ளது. அதனை கோவில்வழி, பாலாஜி நகரை சேர்ந்த கார்த்திக்குமார் (வயது 26) என்பவர் ஓட்டி வந்துள்ளார். செவந்தாம்பாளையத்தை அடுத்த சந்திராபுரம், பண்ணாரியம்மன் நகர் அருகே நேற்று மதியம் 3 மணியளவில் வந்தபோது வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்துள்ளது. அதில் சந்திராபுரத்தில் இருந்து செவந்தாம்பாளையத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த 2 பே்ா பெரிச்சிபாளையம் வினோபா நகரை சேர்ந்த தம்பதியான ராஜா(46), கேமாதி (35) ஆகியோர் மீது வேன் கவிழ்ந்தது. அதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த நல்லூர் போலீசார் மற்றும் தெற்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு படுகாயம் அடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நடுரோட்டில் வேன் கவிழ்ந்து கிடந்ததால் கிரேன் வரவழைக்கப்பட்டு வேனை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
Related Tags :
Next Story