பெண் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது


பெண் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது
x
தினத்தந்தி 14 Jun 2021 10:38 PM IST (Updated: 14 Jun 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் உடல்நல குறைவால் இறந்த பெண் வழக்கில் திடீர் திருப்பமாக அவரது கணவரே கழுத்தை நெரித்து கொலை ெசய்தது பிரேத பரிசோதனையில் அம்பலமானது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை புதுவாணியங்குளம் 5-வது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 51), ஆட்டோ மெக்கானிக். இவரது மனைவி லட்சுமி (49). இவர் கடந்த 1-ந் தேதி இரவு உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அப்போது அவர் உடல் நலகுறைவால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பிரேத பரிசோதனை முடிவில் லட்சுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

கைது

லட்சுமியின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தனது மனைவிக்கு அடிக்கடி உடல்நலம் பாதிப்பு ஏற்படுவதாகவும், அதற்கு செலவு செய்ய முடியாததால் அவரை கழுத்தை நெரித்து கொன்றதாக அவர் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story