புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் டெய்சிகுமார். இவர் கடலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக நாகப்பட்டினத்தில் பயிற்சி துணை கலெக்டராக பணியாற்றி வந்த அபிநயா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை புதுக்கோட்டையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் கலெக்டர் உமாமகேஸ்வரியை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். புதிதாக பொறுப்பேற்ற வருவாய் கோட்டாட்சியர் அபிநயாவுக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.