நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி தாக்குதல்


நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி தாக்குதல்
x
தினத்தந்தி 14 Jun 2021 11:08 PM IST (Updated: 14 Jun 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.

புதுக்கோட்டை, ஜூன்.15-
நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி ஆலோசனை வழங்கினார்.
தாக்குதல் அறிகுறிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் சில இடங்களில் சுருள் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதனை உரிய பாதுகாப்பு முறையினை கடைப்பிடித்து ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம்.
சுருள் பூச்சியின் புழுக்கள் இலைகளை துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடுநரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும், பின்பு வளர்ந்த புழுக்கள் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டிச் சேதம் விளைவிக்கும்.
ஊடுபயிர்
தீவிரதாக்குதலுக்கு உண்டான செடிகள் காய்ந்தும் சுருங்கியும் காணப்படும். இதனால் பாதிக்கப்பட்ட வயலைத் தொலைவிலிருந்து பார்த்தால் எரிந்து காய்ந்தது போல் காணப்படும். ஊடுபயிராகத் தட்டைப்பயறு அல்லது உளுந்து பயிரை நிலக்கடலையுடன் முறையே 1:4 எனும் விகிதத்தில் விதைக்க வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு விளக்குப் பொறி 5 எண்கள் வீதம் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை வைத்துத் தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம்
இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story