கொரோனா நோயாளிகள் பற்றி தகவல் அறிய கட்டுப்பாட்டு அறை திறப்பு
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பற்றி தகவல் அறிய நேற்று கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் உறவினர்கள் தங்க முடியாத நிலையில், அவர்களது உடல்நிலை, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அறிய முடியாமல் தவித்து வந்தனர். இந்த குறைைய போக்கும் வகையில், மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் முருகவேல் அறிவுரையின் பேரில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கட்டுப்பாட்டு அறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பெண்கள் நலச்சங்கம் மூலம் கண்ணன் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் தனி செயலி ஒன்றை உருவாக்கி உள்ளனர். அதன் வெள்ளோட்டம் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.
அந்த பணிகள் அனைத்தும் முழுமை அடைந்ததை தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறை நேற்று திறக்கப்பட்டது. அந்த கட்டுப்பாட்டு அறையை 6383302456 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு, நோயாளிகளின் உடல் நிலை, சிகிச்சைகள் குறித்து கேட்டறியலாம் என மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், நிலைய மருத்துவர் பூவேஸ்வரி ஆகியோர் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலிய கண்காணிப்பாளர் அசோதா, செவிலியர்கள் மகேஷ், ஜமுனா, லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story