‘மதுக்கடை திறப்பில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது’-எச்.ராஜா கடும் தாக்கு


‘மதுக்கடை திறப்பில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது’-எச்.ராஜா கடும் தாக்கு
x
தினத்தந்தி 14 Jun 2021 11:24 PM IST (Updated: 14 Jun 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

மதுக்கடை திறப்பில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று எச்.ராஜா கடுமையாக தாக்கி உள்ளார்.

காரைக்குடி,

மதுக்கடை திறப்பில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று எச்.ராஜா கடுமையாக தாக்கி உள்ளார்.

இரட்டை வேடம்

காரைக்குடியில் பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது கொரோனாவை மீண்டும் பரப்பும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்கின் போது மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது தி.மு.க மதுக்கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. ஆனால் அவர்களின் ஆட்சியில் தற்போது மீண்டும் மதுக்கடைகளை திறந்துள்ளனர். இதில் இருந்து மதுக்கடை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

 அராஜக ஆட்சி

தி.மு.க. ஆட்சி குறித்து 100 நாட்கள் வரை ஏதும் கருத்து கூற கூடாது என்ற நிலையில் இருந்த நிலையில் அவர்களின் அராஜக ஆட்சி ஆரம்பத்திலேயே தொடங்கியதால் தற்போது பதில் கூற வேண்டிய நிலை உள்ளது. கோவில்கள் எல்லாம் மூடிய நிலையில் தற்போது மதுக்கடைகள் மட்டும் எவ்வாறு அரசு திறக்கலாம். ஏற்கனவே ஒருவித பயத்துடன் தி.மு.க.விற்கு வாக்களித்த மக்கள் தற்போது ஏன் வாக்களித்தோம் என்று எண்ணி வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கட்டுமான பொருட்களின் விலையை 3-ல் ஒரு பங்கு உயர்த்தியதால் இனி வரும் காலங்களில் நடுத்தர மக்களால் வீடு கட்ட முடியாத நிலை உருவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story