கொள்முதல் பணிகள் துரிதப்படுத்தப்படுமா


கொள்முதல் பணிகள் துரிதப்படுத்தப்படுமா
x
தினத்தந்தி 14 Jun 2021 11:30 PM IST (Updated: 14 Jun 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் துரிதப்படு்த்தப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

மன்னார்குடி;
நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் துரிதப்படு்த்தப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். 
கோடை நெல் சாகுபடி
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆழ்குழாய் (பம்புசெட்) பாசனம் மூலம் பல்லாயிரக்கான எக்டேரில் கோடை நெல் பயிரிடுப்பட்டு இருந்தது. மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது விவசாயிகள் தீவிர அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து சென்று காத்துகிடக்கும் நிலை உள்ளது. தினமும் ஏராளமான விவசாயிகள் நெல்லை கொண்டு வருவதால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இடப்பற்றாக்குறையால் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே சாலை மற்றும் வயல்களில் கொட்டி வைத்து ஒரு வார காலத்துக்கு மேல் விவசாயிகள் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. 
தார்ப்பாய்
மேலும் விவசாயிகள் அறுவடை செய்த நெல் நன்கு காய்ந்த நிலையில் இருந்தாலும் தற்போது அடிக்கடி பெய்யும் வெப்ப சலன மழை காரணத்தால் ஈரப்பத சதவீதம் அதிகரிப்பதாவும் இதனை தடுக்க நெல்லை மூடி பாதுகாக்க கொள்முதல் நிலையங்களில் போதிய தார்ப்பாய் வசதிகள் இல்லை என விவசாயிகள் கூறுகிறார்கள்.
 மேலும் நெல்லை மூடி வைப்பதால் ஏற்படும் புழுக்கமும் ஈரப்பத சதவீதம் அதிகரிக்க காரணமாவதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள்.
துரிதப்படுத்த கோரிக்கை 
மேலும் அருகருகே விவசாயிகளின் நெல் குவியல்கள் இருப்பதால் காய வைக்க இடமில்லாமல் இருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே அரசு ஈரப்பத சதவீதத்தை உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் நவீன நெல் உலர்த்தி எந்திரங்களை வழங்கி கொள்முதல் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரி்க்கை விடுத்துள்ளனர். 

Next Story