கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு அபராதம்


கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 14 Jun 2021 11:40 PM IST (Updated: 14 Jun 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரப்பகுதியில் கொரோனா ஊரடங்கையொட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஜவுளிக்கடைகள், பேன்சி ஸ்டோர், காலணி கடைகள் இயங்குவதாக நகரசபை ஆணையாளர் ராஜாராமுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்டோர் மெயின் ரோடு, சந்தைப்பேட்டை தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இயங்கிய பேன்சி ஸ்டோர் மற்றும் காலணி கடைக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர். மேலும் மறுஉத்தரவு வரும் வரை கடைகளை திறக்கக்கூடாது என்று அறிவுறுத்தி சென்றனர்.

Next Story