தேவகோட்டை,
தேவகோட்டை அருகே சண்முகநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைைம தாங்கினார். ஓய்வு பெற்ற ஐகோர்்ட்டு நீதிபதி எம்.சொக்கலிங்கம், நோயாளிகள் பயன்படுத்தும் வீல்சேர், இ.சி.ஜி. கருவி, கொதிநிலை கிருமி நீக்கம் செய்யும் எந்திரம் என ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை கலெக்டரிடம் வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது, கொரோனா காலக்கட்டத்தில் தங்களுடைய குடும்பத்தை மறந்து தங்களது உயிரை துச்சமென நினைத்து பொதுமக்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர். அவர்களை நாம் பாராட்ட வேண்டும். வாழ்த்த வேண்டும். போற்ற வேண்டும். ேநாயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்பவர்களுக்கு எனது நன்றியை காணிக்கையாக்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி, தேவகோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பிர்லா கணேசன், வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன், கண்காணிப்பு அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.