காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
இளம்பெண்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சனி (வயது 21). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த கந்தலம்பட்டியைச் சேர்ந்த தர்மன் (29) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியுடன் காணப்பட்ட சிவரஞ்சனி நேற்று முன்தினம் கந்தலம்பட்டி கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் என்பவருடைய நிலத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை
இதுகுறித்து சிவரஞ்சனியின் தாய் காந்தி கொடுத்த புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டுக்குள் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து உதவி கலெக்டர் கற்பகவள்ளி விசாரணை நடத்தி வருகிறார்.
=====
Related Tags :
Next Story