ஊராட்சி மன்ற கவுன்சிலர்- கணவருக்கு வெட்டு


ஊராட்சி மன்ற கவுன்சிலர்- கணவருக்கு வெட்டு
x
தினத்தந்தி 14 Jun 2021 11:53 PM IST (Updated: 14 Jun 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே ஊராட்சி மன்ற கவுன்சிலர், கணவருக்கு வெட்டு விழுந்தது.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ள தி.வடகரை கிராம ஊராட்சியில் மன்ற கவுன்சிலராக இருந்து வருபவர் முத்திருளாயி(வயது 45). இவர் நேற்று தனது வீட்டில் இருந்தார்.
அப்போது மாலை வீட்டுக்கு வந்த சிலர் முத்திருளாயி, அவரது கணவர் ராமலிங்கம் மற்றும் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டினார்கள்.
முத்திருளாயின் மருமகள் கர்ப்பிணியான ராமலட்சுமியையும் அந்த கும்பல் காலால் மிதித்தாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி விட்டனர்.
காயம் அடைந்தவர்கள் அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்கள். இது குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை விசாரணை நடத்தினார்.


Next Story