நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்ட பொதுமக்கள்
நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்ட பொதுமக்கள்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஆனால் பற்றாக்குறை காரணமாக பல இடங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போடமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வந்தனர். பல இடங்களில் தடுப்பூசி போடுவதும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. இதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.
பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்டு திரும்பிச்சென்றனர். இந்த பணிகளை டாக்டர்கள் சமீதா, முகில் வண்ணன், சுகாதார ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் கண்காணித்தனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, நல்லட்டி பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற் 350 பேருக்கு தடுப்பூசி போடப் பட்டது என்றனர்.
Related Tags :
Next Story