88 பேருக்கு கொரோனா


88 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 Jun 2021 11:59 PM IST (Updated: 14 Jun 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 88 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 3 இலக்கத்தில் இருந்து வந்த தொற்று நேற்று இரட்டை இலக்கத்தில் குறைந்தது.
நேற்று ஒரே நாளில் 88 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1,030 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 237 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.மேலும் சிவகங்கை மாவட்டத்தை சேர்நத 76 வயதுடைய முதியவர் ஒருவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Next Story