புதிதாக 198 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 198 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 498 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 198 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 498 ஆக உயர்ந்துள்ளது.
உயர்வு
மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 42,895 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 39,864 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 661 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,534 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
6 பேர் பலி
கொரோனா பாதிப்பிற்கு மேலும் 6 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 498 ஆக உயர்ந்துள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் 1,538 படுக்கைகள் உள்ள நிலையில் 721 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 817 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1753 படுக்கைகள் உள்ள நிலையில் 338 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 1415 படுக்கைகள் காலியாக உள்ளன.
பாதிப்பு
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி, சூலக்கரை, வ.உ.சி. நகர், ரோசல்பட்டி, கெப்பிலிங்கம்பட்டி, ெரயில்வே பீடர் ரோடு, லட்சுமி நகர், பாண்டியன் நகர், கருப்பசாமி நகர், உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கீழ பொட்டல் பட்டி, சிவலிங்கபுரம், முனீஸ்வரர் காலனி, புதுப்பட்டி, சாத்தூர், சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, எம்.ரெட்டியபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனை
நேற்று மாவட்ட பட்டியலின் படி 21 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பட்டியலில் 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 9 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story