நெல் கொள்முதல் பாதிப்பு
தேவதானம், சேத்தூர் பகுதியில் பெய்த மழையினால் நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளது.
தளவாய்புரம்,
தேவதானம், சேத்தூர் பகுதியில் பெய்த மழையினால் நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் நிலையம்
தேவதானம், சேத்தூர் பகுதியில் கடந்த 1-ந் தேதி முதல் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு தினமும் விவசாயிகளிடமிருந்து 600 முதல் 800 மூடை வரை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் இந்த பகுதியில் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் நேற்று 500 நெல் மூடைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
நெல் பாதிப்பு
தற்போது கோடை கால மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த மழையால் அறுவடை செய்த நெல் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இங்கு நெல் கொல்முதல் செய்ய ஏராளமான விவசாயிகள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இதனை கவனத்தில் கொண்டு இந்த கொள்முதல் நிலையங்களில் தினமும் 1,000 நெல் மூடைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story