கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணி


கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணி
x
தினத்தந்தி 15 Jun 2021 12:56 AM IST (Updated: 15 Jun 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
போக்குவரத்து நெரிசல் 
ராஜபாளையம்- சத்திரப்பட்டி சாலை வழியாக தினமும் எண்ணற்ற பேர் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் ரெயில் வரும் நேரங்களில் அடிக்கடி கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டு வந்தது. 
 சத்திரப்பட்டி, ஆலங்குளம், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த சாலை வழியாக தான் சென்று வந்தனர். இவ்வாறு செல்பவர்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்குவதும், கேட் அடைக்கும் போது செல்ல முடியாமல் தவித்து வருவதும் தொடர்கதையாக இருந்து வந்தது. 
ரெயில்வே மேம்பாலம் 
இதையடுத்து இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 
இவர்களின் ேகாரிக்கையை ஏற்று ரெயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.42 கோடி செலவில் ெரயில்வே மேம்பால பணி தொடங்கியது. சிறிது காலம் நடைபெற்ற இந்த பணி மீண்டும் தொடராமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. 
இவ்வாறு இந்த பணிகள் 3 ஆண்டுகளாகியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கிழக்கு, மேற்கு பகுதியில் மேம்பால பணி அமைத்து பாதியில் நிறுத்தி உள்ளதால் தேவையற்ற செடிகள் பாலத்தின் மேல் வளர்ந்து காணப்படுகிறது. 
நோக்கம் 
ஒரு சில காரணங்களால் இந்த பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் எந்த நோக்கத்திற்காக இந்த பாலம அமைக்கப்பட்டதோ அந்த ேநாக்கம் நிறைவேறாமல் போய்விடுமோ என இப்பகுதி மக்கள் கவலையுடன் கூறுகின்றனர். 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- 
ராஜபாளையம் - சத்திரப்பட்டி சாலையில்  போக்குவரத்து அதிகமாக இருப்பதால் அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். 
நடவடிக்கை 
இதையடுத்து அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும்  பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.  பில்லர் வளர்ந்ததுடன் அந்த பணிகளை தொடராமல்  ஒரு சில காரணங்களால் கிடப்பில் போட்டு உள்ளனர். 
 சத்திரப்பட்டி சாலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அதிகம் உள்ளன. எனவே கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கு முன்பு இந்த பாலப்பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். 
ஆகவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு கிடப்பில் போடப்பட்ட ெரயில்வே மேம்பால பணிகளை உடனே முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 


Next Story