தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து


தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 15 Jun 2021 1:13 AM IST (Updated: 15 Jun 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் உள்ள தீப்பெட்டி ஆலை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி, 
சிவகாசியில் உள்ள தீப்பெட்டி ஆலை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 
தீ விபத்து 
சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் உள்ள முருகன் காலனியில் மணி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது.  இங்கு எந்திரம் மூலம் தீப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. வழக்கம்போல் நேற்று காலை தீக்குச்சி உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் மதியம் 1.30 மணி அளவில் தீக்குச்சி உற்பத்தி நடைபெற்று வந்த எந்திரத்தில் உராய்வின் காரணமாக தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. 
எந்திரம் சேதம்
இதில் அந்த எந்திரம் எரிந்து ேசதமானது. இதுகுறித்து தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலை தனி தாசில்தார் சிவஜோதியும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

Next Story