இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு


இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Jun 2021 1:37 AM IST (Updated: 15 Jun 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

இருதரப்பினர் மோதலில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மானூர்:

மானூர் அருகே உள்ள பலஸ்தீனாபுரத்தை சேர்ந்தவர் ஜெபஸ்டின் (வயது 33). இவர் தனது உறவினரின் விஷேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

இதை அதே ஊரைச் சேர்ந்த சசிமோகன் (25) என்பவர் தன்னை தான் விமர்சித்து பேசுகிறார் என்று நினைத்து தனது உறவினர்களுடன் சென்று   ஜெபஸ்டினை சரமாரியாக  தாக்கியதாக  கூறப்படுகிறது. மேலும் சசிமோகனை ஜெபஸ்டின் உறவினர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து இருதரப்பினர் மானூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Next Story