வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 15 Jun 2021 1:40 AM IST (Updated: 15 Jun 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

சுத்தமல்லி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

பேட்டை:

சுத்தமல்லியை அடுத்த வடக்கு சங்கன்திரடு பார்வதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் ஆதிமூலம் (வயது 21). சென்னையில் வேலை பார்த்து வந்த இவர் கொரோனா ஊரடங்கால் தற்சமயம் சொந்த ஊருக்கு வந்திருந்தார். 

இந்த நிலையில் அவரை வழி மறித்த சங்கன்திரட்டை சேர்ந்த மகாராஜன், மகா கணேஷ், தினேஷ் ஆகிய 3 பேரும் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதை ஆதிமூலம் தட்டி கேட்டதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

தகராறு முற்றவே 3 பேரும் சேர்ந்து அரிவாளால் ஆதிமூலத்தை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார், 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story