ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது


ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2021 1:42 AM IST (Updated: 15 Jun 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேட்டை:

நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி பழவூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி மணி மகன் பாலசுப்பிரமணி என்ற சுரேஷ் (வயது 38). இவரது மாமனார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்தார். இதனால் மனமுடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

நேற்று அவரது உடல், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்சில் சுரேஷின் உடலை பழவூருக்கு கொண்டு சென்றனர். பின்னர் சுரேஷின் வீட்டில் இருந்து அவரது உடலை சுடுகாட்டுக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.

அப்போது ஆம்புலன்ஸ் டிரைவரான கைலாசபுரம் நடு தெருவைச் சேர்ந்த வினோத்குமாரிடம் (33) சிலர், ஆம்புலன்சை மெதுவாக ஓட்டிச் செல்லுமாறு கூறி தகராறு செய்து தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழவூரைச் சேர்ந்த முத்துபாண்டி (48), ஜெயக்குமார் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story