ஜெயங்கொண்டம், தா.பழூர் துணை மின்நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்


ஜெயங்கொண்டம், தா.பழூர் துணை மின்நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Jun 2021 1:54 AM IST (Updated: 15 Jun 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம், தா.பழூர் துணை மின்நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-  ஜெயங்கொண்டத்தில் கடலங்குடி- ஜெயங்கொண்டம் உயர் அழுத்த மின் பாதையில் அவசரகால பழுது நீக்கும் பணி நடைபெற இருப்பதால் ஜெயங்கொண்டம் துணை மின் நிலையம், தா.பழூர் துணை மின் நிலையம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின் வினியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, வாரியங்காவல், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர் த.பொட்டக்கொல்லை, துவரங்குறிச்சி, தா.பழூர், சிலால், வானதிரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைகுடம், சோழமாதேவி, தென்கச்சி பெருமாள் நத்தம், நாயகனைப்பிரியாள், பொற்பதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி மற்றும் துணை மின் நிலையங்களின் அருகில் உள்ள கிராம பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story