பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது


பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது
x

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

திருச்சி
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளிகளில் மாணவ, மாணவிகள் நேரடியாக செல்ல முடியாததால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக 10, 11 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்தபடி திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று முதல் நாளில் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. ஆனால், 9-ம் வகுப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் பெரும்பாலானவர்களிடம் இல்லை. இருப்பினும் பிளஸ்-1 வகுப்புக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தனர்.


Next Story