டாஸ்மாக் கடைகள் திறப்பு


டாஸ்மாக் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 15 Jun 2021 3:06 AM IST (Updated: 15 Jun 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன

திருச்சி
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. அன்று முதல் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டன. மேலும் அரசின் பொது பஸ் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி படிப்படியாக தளர்வுடன் கூடிய ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. அதில், மூடப்பட்டிருந்த அரசின் டாஸ்மாக் கடைகள், டீக் கடைகள், சலூன் கடைகளை நேற்று முதல் திறக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த 1 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த 183 டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. இதனால், குஷி அடைந்த மதுப்பிரியர்கள் கடை திறக்கும் நேரத்திற்கு முன்னதாகவே வந்து குவிந்தனர். அவர்களை 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்தி போலீஸ் பாதுகாப்புடன் டோக்கன் வழங்கப்பட்டு மதுபாட்டில்கள் விற்கப்பட்டன. முன்னதாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டிருந்தது. மேலும் ஒலிபெருக்கி மூலம் சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுத்தியவாறும், டோக்கன் வழங்கும் இடம் குறித்து போலீசார் வழிகாட்டியவாறு இருந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்பட்டன. சில மதுக்கடைகளில் பெண்களும் ஆர்வமாக மதுபாட்டில்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.




Next Story