சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் கலெக்டர் ஆய்வு
சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் முதலில் அமைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதி படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் திறக்கப்பட்டது. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான வசதிகள் குறித்து நேற்று கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், 500 படுக்கை வசதிகள் கொண்ட கூடுதல் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தும் பணிகள், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் அமைக்கும் பணிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தர விட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஷேக் அப்துல் ரகுமான், சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story