நண்பர்களுடன் குளித்தபோது சோகம்: கிணற்றில் மூழ்கி விவசாயி பலி


நண்பர்களுடன் குளித்தபோது சோகம்: கிணற்றில் மூழ்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 15 Jun 2021 6:48 AM IST (Updated: 15 Jun 2021 6:48 AM IST)
t-max-icont-min-icon

நண்பர்களுடன் குளித்தபோது சோகம்: கிணற்றில் மூழ்கி விவசாயி பலி

தேன்கனிக்கோட்டை:
தளி அருகே நண்பர்களுடன் குளித்தபோது கிணற்றில் மூழ்கி விவசாயி பலியானார்.
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள கொடியாளம் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகன் பரத்ராஜ் (வயது 22). விவசாயி. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள மோகன் ரெட்டி என்பவருடைய தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது பரத்ராஜ் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டதுடன் இதுகுறித்து உடனடியாக பரத்ராஜின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர். 
அதன்பேரில் அங்கு கிராம மக்களுடன் வந்த அவர் சிலரின் உதவியோடு கிணற்றில் மூழ்கிய பரத்ராஜை மீட்டனர். பின்னர் ஆம்புலன்சில், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரத்ராஜின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
விசாரணை
இதையடுத்து விவசாயியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அஞ்செட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கிணற்றில் குளித்தபோது விவசாயி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.

Next Story