பொய்யபட்டி வனப்பகுதியில் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் குரங்குகள்


பொய்யபட்டி வனப்பகுதியில் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் குரங்குகள்
x
தினத்தந்தி 15 Jun 2021 6:49 AM IST (Updated: 15 Jun 2021 6:49 AM IST)
t-max-icont-min-icon

பொய்யபட்டி வனப்பகுதியில் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் குரங்குகள்

அரூர்:
அரூரில் இருந்து தீர்த்தமலை வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் பொய்யபட்டி வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக வாகனங்களில் செல்வோர் பழம், பிஸ்கட், தின்பண்டங்களை குரங்குகளுக்கு ேபாட்டு செல்வர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் வாகன போக்குவரத்து இல்லாததால் வனப்பகுதிக்கு செல்லும் வழியில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது. இதனால் வனப்பகுதியில் வாழும் குரங்களுக்கு உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன, எனவே பசியால் வாடும் குரங்குகளுக்கு வனத்துறை அதிகாரிகள் உணவு, தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story