மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் இன்று மின்தடை
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
வண்டலூர்,
மறைமலைநகர் கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அவசரகால பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக மறைமலைநகர் தொழிற்பேட்டை பகுதி, காட்டாங்கொளத்தூர், கொருக்கந்தாங்கல், காவனூர், பேரமனூர், திருக்கச்சூர், சட்டமங்கலம், எம்.டி.சி. நகர், ஆப்பூர் பிரதான சாலை, மேல் கால்வாய், அஸ்தினாபுரம், பாண்டூர், காயரம்பேடு, கன்னிவாக்கம், நாவலூர், காஞ்சிவாக்கம், கூழாங்கல்சேரி, ராஜீவ்காந்தி நகர், கண்டிகை மார்க்கெட், தாகூர் மருத்துவக் கல்லூரி, ரத்தினமங்கலம், வெங்கம்பாக்கம், வெளிச்சை, தையூர், ரஜினி தோட்டம், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை, சாத்தான்குப்பம் தொழிற்பேட்டை ஒரு பகுதி, சதானந்தபுரம், ஆலப்பாக்கம், எஸ்.எஸ்.எம். நகர், நெடுங்குன்றம், கோவளம் நகரம், முட்டுக்காடு ஒரு பகுதி, வீராணம் ரோடு, எம்.ஜி.ஆர். தெரு திருப்போரூர், கழிப்பட்டூர், படூர், டி.வி.எஸ். அடுக்குமாடி குடியிருப்பு, காந்திநகர், மெரினா அடுக்குமாடி குடியிருப்பு, கே.வி. மெரின், வேம்புலி அம்மன் கோவில் தெரு, ஆலத்தூர் தொழிற்பேட்டை பகுதி, ஜெ.ஜெ.நகர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மறைமலைநகர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், வேலூர் மற்றும் அச்சரப்பாக்கம் துணை மின்நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே மதுராந்தகம் அடுத்துள்ள அச்சரப்பாக்கம், கீழாமூர், பாதிரி, ஒரத்தூர், ஆலப்பாக்கம், பசுவங்கரணை, ஓட்டக்கோவில், வீராணகுண்ணம், காவாத்தூர், தேவாத்தூர், மாரிபுத்தூர், மடையம்பாக்கம், பெரும்பாக்கம், வீரபோகம், மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை செய்யப்படும் என மதுராந்தகம் மின் செயற்பொறியாளர் முனைவர் ச.கிருபானந்தன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story