ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம்


ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2021 11:05 AM IST (Updated: 15 Jun 2021 11:05 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் மாத ஊதியத்தை உயர்த்தி தரக்கோரி நேற்று கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பூர்,

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் முதுகலைப்பட்ட மேற்படிப்பு படிக்கும் பயிற்சி டாக்டர்கள் 80-க்கும் மேற்பட்டோர், தங்களது மாத ஊதியத்தை ரூ.37 ஆயிரமாக உயர்த்தி தரக்கோரி நேற்று கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் கூறும்போது, “கொரோனா நோய்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து நேரம் பார்க்காமல் முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்கள் பணிபுரிந்து வருகிறோம். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, எங்கள் சம்பளத்தை உயர்த்தி‌ அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Next Story