திருப்பூரில் இ-சேவை மையங்கள் செயல்பட தொடங்கியதால் சான்றிதழ்கள் பெறுவதற்காக விண்ணப்பிக்க பொதுமக்கள் ஆர்வம்
திருப்பூரில் இசேவை மையங்கள் செயல்பட தொடங்கியதால் சான்றிதழ்கள் பெறுவதற்காக விண்ணப்பிக்க பொதுமக்கள் ஆர்வம்
திருப்பூர்
திருப்பூரில் இ-சேவை மையங்கள் செயல்பட தொடங்கியதால் சான்றிதழ்கள் பெறுவதற்காக விண்ணப்பிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இ-சேவை மையங்கள்
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும் அதிகமாக இருந்தது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகள் மற்றும் இடங்களுக்கு அதிகளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அந்த வகையில் இ-சேவை மையங்கள் அனைத்தும் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற முடியாமல் பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.
சான்றிதழ்கள்
இருப்பினும் வருகிற 21-ந் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று குறைவான மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளும், தொற்று கணிசமான அளவு உள்ள மாவட்டங்களுக்கு சில தளர்வுகளையும் தமிழக அரசு வழங்கியுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இ-சேவை மையங்கள் செயல்பட தொடங்கின.
மாநகர் பகுதிகளில் வடக்கு தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் இ-சேவை மையங்கள் இயங்க தொடங்கியதால், பொதுமக்கள் வரிசையில் காத்து நின்று தங்களுக்கு தேவையான சான்றிதழ்களுக்கு ஆர்வமாக விண்ணப்பித்தனர். ஆதார் திருத்தங்களையும் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story