விபத்தில் ராணுவ வீரர் சாவு
டெல்லியில் நடந்த விபத்தில் கம்பத்தை சேர்ந்த ராணுவ வீரர் பலியாகினார். அவருடைய உடல் இன்று (புதன்கிழமை) கம்பத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
தேனி:
தேனி மாவட்டம் கம்பம் சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபாகரன் (வயது 33). இவர், புதுடெல்லி ராணுவ படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது டெல்லி கண்ட் பேஸ் மருத்துவமனை அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய உடல் டெல்லியில் இருந்து நேற்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கம்பத்திற்கு இன்று (புதன்கிழமை) காலை கொண்டு செல்லப்படுகிறது. அவருடைய உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்படுகிறது.
பின்னர் கம்பம் சுருளிப்பட்டி சாலையில் உள்ள தொட்டன்மன்துறை மயானத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இறந்த பிரபாகரனுக்கு திவ்யா (30) என்ற மனைவியும், லோகிதா ஸ்ரீ (8), யுகாசினி (3) என்ற மகள்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story