சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 15 Jun 2021 10:16 PM IST (Updated: 15 Jun 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

சங்கராபுரம்

திருவண்ணாமலை மாவட்டம், டி.வலசை கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கருணாநிதி(வயது 36). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கருணாநிதி சங்கராபுரம் அருகே கிடங்கன்பாண்டலத்தில் உள்ள தனது உறவினர் கண்ணகிக்கு சொந்தமான வயலில் நேற்று காலை களைக்கொல்லி மருந்து அடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற தாழ்வழுத்த மின்கம்பி அவரது கழுத்தில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி கருணாநிதிசம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
இது குறித்து கருணாநிதியின் மனைவி விஜயா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story