கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த காட்டெருமை


கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த  காட்டெருமை
x
தினத்தந்தி 15 Jun 2021 10:30 PM IST (Updated: 15 Jun 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் காட்டெருமை உலா வந்தது.

கூடலூர்

கூடலூர் அருகே தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சி கொல்லி, பேபி நகர் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகள் முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியே காட்டெருமை பேபி நகருக்குள் புகுந்தது. 

இதைக்கண்டு பீதியடைந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். பின்னர் காட்டெருமை அப்பகுதியில் முகாமிட்டு பசும் புற்களை மேய்ந்தது. நீண்ட நேரமாக அங்கிருந்து காட்டெருமை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மிதித்து நாசம் செய்தது. தொடர்ந்து அங்கிருந்து வனப்பகுதிக்கள் சென்றது. இதையடுத்து பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதிக்குள் வந்த காட்டெருமையின் உடலில் கட்டி போன்ற தோற்றம் உள்ளது. இதனால் உடல்நலன் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. எனவே வனத்துறையினர் உரிய ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

Next Story