தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து கேரட் அறுவடைக்கு தொழிலாளர்களை ஏற்றிய லாரி பறிமுதல்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து கேரட் அறுவடைக்கு தொழிலாளர்களை ஏற்றிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருவதால் தொற்று பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட வி.சி.காலனியில் இருந்து தொழிலாளர்களை கேரட் அறுவடைக்காக அழைத்து செல்வதற்காக லாரி வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து செல்லக் கூடாது. அறுவடைக்கு செல்ல லாரியில் ஏறிய தொழிலாளர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர்.
தொடர்ந்து அந்த லாரி ஊட்டி நகர மேற்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அரசு விதிமுறையை மீறியதாக லாரி டிரைவருக்கு நகராட்சி மூலம் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்திய பின்னர் லாரி விடுவிக்கப்படும் என்று ஆணையாளர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story