திண்டுக்கல்லில் ரசாயன திரவம் தெளித்து பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்


திண்டுக்கல்லில் ரசாயன திரவம் தெளித்து பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Jun 2021 10:48 PM IST (Updated: 15 Jun 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ரசாயன திரவம் தெளித்து பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட நியமன அலுவலர் சிவராமபாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், ஜாபர்சாதிக் ஆகியோர் திண்டுக்கல்லில் உள்ள பழக்குடோன்களில் சோதனை நடத்தினர். இதில் திண்டுக்கல் ஸ்பென்சர் காம்பவுண்டு, திருவள்ளுவர் சாலை, திருச்சி சாலை, ஆர்.எம்.காலனி, மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 10 குடோன்களில் சோதனையிட்டனர். இதில் ஒரு குடோனில் ரசாயன திரவம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழம் இருந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த குடோன் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் 3 குடோன்களில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்ததோடு, உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதேபோல் பழனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் தலைமையிலான உணவுப்பாதுகாப்பு துறையினர் ஆயக்குடி பகுதியில் உள்ள மாம்பழ கடைகள், குடோன்களில் திடீர் சோதனை செய்தனர். 

Next Story