மரத்தில் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி சாவு


மரத்தில் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில்  ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 15 Jun 2021 11:36 PM IST (Updated: 15 Jun 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

மரத்தில் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மனைவி ஜெயலட்சுமி(23). கர்ப்பிணியான இவரை பிரசவத்துக்காக உறவினர்கள் 108 ஆம்புலன்சில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். 

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர்-அரியபெருமானூர் இடையே உள்ள ஏரிக்கரை அருகில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய ஆம்புலன்ஸ் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விஜயலட்சுமியின் மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த ஜெயலட்சுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். புதுப்பட்டு ஆரம்பசுகாதார நிலைய ஊழியர் மீனா(52), ஆம்புலன்ஸ் டிரைவர் கலியமூர்த்தி, மருத்துவ உதவியாளர் தேன்மொழி ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் மீனா சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மரத்தில் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.



Related Tags :
Next Story