பெண் கவுன்சிலரை வெட்டிய 4 பேர் கைது
திருப்புவனம் அருகே உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தால் பெண் கவுன்சிலரை வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்புவனம்,
அது சமயம் பாண்டியம்மாள், மகன் ரவி, கணவர் நாகராஜ், ரவியின் மனைவி மல்லிகா, ரவியின் சகோதரர் வேல்பாண்டி உள்பட பலர் சேர்ந்து முத்திருளாயி தரப்பினரை அசிங்கமாகப் பேசியும் வாள், சைக்கிள் செயின், கம்பு போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் பரந்தாமன், ராமலிங்கம், பரமேஸ்வரன், ராஜலிங்கம் ஆகியோருக்கு தலையில் ரத்தக்காயமும் முத்திருளாயிக்கு மூக்கு, வாயில் ரத்தக்காயமும் ஏற்பட்டுள்ளது. காயம்பட்ட அனைவருக்கும் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து பரந்தாமன் கொடுத்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை எதிர் தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மல்லிகா, வேல்பாண்டி, நாகராஜ், பாண்டியம்மாள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story