திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகேயுள்ள வஞ்சினிப்பட்டியைச் சேர்ந்தவர் ராம்கி (வயது 28). இவர் தனது மைத்துனரை மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூரில் விட்டுவிட்டு வஞ்சினிப்பட்டிக்குத் திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளோடு தடுமாறி விழுந்துள்ளார். அந்த பள்ளத்தில் தண்ணீர் கிடந்ததால் அதில் மூழ்கி இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கண்டவராயன்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவருக்கு விமலா என்ற மனைவியும் 3 வயது சிறுமியும், 4 மாத பெண் குழந்தையும் உள்ளது.