கிணத்துக்கடவில் குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு
கிணத்துக்கடவில் குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சியில் இருந்து குறிச்சி குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கோவை அருகே உள்ள குறிச்சி, குனியமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஆத்து பொள்ளாச்சியில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர் கிணத்துக்கடவு பஸ் நிலையம் அருகே உள்ள தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப் படுகிறது.
இந்த நிலையில் கிணத்துக்கடவில் அரசுமேல் நிலைப்பள்ளி அருகில் குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கூட்டு குடிநீர் திட்ட உதவி நிர்வாக பொறியாளர் பட்டர், இளநிலை பொறியாளர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கு பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு குழி தோண்டி உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பணி முடிந்ததும் மீண்டும் கிணத்துக்கடவில் இருந்து குடிநீர் குறிச்சி, குனியமுத்தூர் பகுதிக்கு வினியோகம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story