மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு 4 பேர் பலி + "||" + Corona

கொரோனாவுக்கு 4 பேர் பலி

கொரோனாவுக்கு 4 பேர் பலி
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள்.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தொற்று கடந்த 2 நாட்களாக இரண்டு இலக்கமாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 961 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர் நேற்று ஒரே நாளில் 143 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 60 வயதான முதியவர் கொரோனாவுக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 67 வயதான முதியவர், 47 வயதான ஆண் ஒருவரும், 50 வயதான பெண் ஒருவரும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் 4 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 29245 ஆக உயர்வு
2. புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. 11 மாவட்டங்களில் பாதிப்பு உயர்வு: தமிழகத்தில் 1,908 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நேற்று தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,908 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
4. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலுக்குப் பின் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வழிகாட்டுதல் வழங்கியபின்னர், 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
5. கொரோனா தாக்கிய 2 வாரத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து: ஆய்வில் தகவல்
கொரோனா தாக்கிய 2 வாரத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.