வால்பாறை அருகே மலைவாழ் மக்களுக்கு கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்
வால்பாறை அருகே மலைவாழ் மக்களுக்கு கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்
வால்பாறை
வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.
தற்போது இங்கு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு செல்வதில் சிரமம் உள்ளது.
வால்பாறை, முடீஸ், சோலையார் நகர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள், ஆஷா மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய நடமாடும் மருத்துவ குழுவினர் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதியில் கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர்.
மருத்துவக்குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை, இருமல், சளி, உடல்வலி, வயிற்றுப்போக்கு ஆகியவை உள்ளதா என்று சோதனை செய்து வருகிறார்கள்.
கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிந்தால் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் நெடுங்குன்றம் மலைவாழ் மக்கள் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வெள்ளிமுடி, கீழ்பூணாச்சி, காடம்பாறை ஆகிய மலைவாழ் மக்கள் வாழும் கிராமத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story