முறப்பநாடு அருகே யூனியன் கவுன்சிலர் வீடு சூறை; 4 பேர் கைது


முறப்பநாடு அருகே யூனியன் கவுன்சிலர் வீடு சூறை; 4 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 12:35 AM IST (Updated: 16 Jun 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

முறப்பநாடு அருகே யூனியன் கவுன்சிலர் வீடு சூறையாடப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம்:
முறப்பநாடு அருகே உள்ள ஆழிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவர் கருங்குளம் யூனியன் 10-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவருக்கும், அ.தி.மு.க. மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ராஜேந்திரனுக்கும் இடையே கட்சி விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஆழிக்குடியில் உள்ள யூனியன் கவுன்சிலர் சுடலைமுத்துவின் வீட்டிற்கு சென்ற மர்மநபர்கள், அவரது உறவினரான கிருஷ்ணன் (வயது 60), சிவராமன் (37), கணபதி மகன் முண்டசாமி (30), அர்ச்சுனன் மகன் மகாராஜன் (35) ஆகியோரை அரிவாளால் தாக்கினர். மேலும் சுடலைமுத்துவின் வீட்டில் இருந்த டி.வி., மேஜை, நாற்காலி, கார் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி சூறையாடியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த புகாரின் பேரில் முறப்பநாடு போலீசார், அ.தி.மு.க. மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக முத்துராமலிங்கம் மகன் முருகேசன் (32), நம்பிராஜன் மகன் ராமன் (30), பார்வதி மகன் வேல்முருகன் (24), துரைப்பாண்டி மகன் மகேஷ் (36) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story