நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தொடங்கியது
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா நேற்று தொடங்கியது
நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா நேற்று தொடங்கியது
நெல்லையப்பர் கோவில்
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனிப்பெருந்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும். ஒரேநாளில் 5 தேர் நெல்லையப்பர் கோவிலில் ஓடுவதால் இந்த ஆனி திருவிழா பிரபலமானதாகும்.
கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெற அறநிலையத்துறை தடை செய்துள்ளது. சுவாமிக்கு பூஜைகள் மட்டும் நடைபெற உத்தரவிட்டுள்ளது.
ஆனித்திருவிழா
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. ஆனால் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை.
இதனால் கோவிலுக்கு வெளியே நின்று சுவாமி, அம்பாளை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு சென்றனர். திருவிழா நாட்களில் தினமும் காலையில் உற்சவர் இருப்பிடத்தில் கும்பம் வைத்து வேள்வி செய்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், தீபாராதனையும் நடக்கிறது.
தினமும் இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும். இதேபோல் மாலையிலும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும். திருவிழா வருகிற 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.
தொலைக்காட்சியில் நேரலை
இந்நிகழ்வுகள் உள்ளூர் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது. மேலும் இக்கோவிலின் அதிகாரப்பூர்வ youtube Channel ஆன nellaiappar kanthimathi youtube Channel, நேரலையில் லிலும், play store ல் Nellaiappar Kovil official என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் திருவிழா நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம்.
Related Tags :
Next Story