179 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
ஆலங்குளம் அருேக 179 மூடை ரேஷன் அரிசிைய பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருேக 179 மூடை ரேஷன் அரிசிைய பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
179 மூடை ரேஷன் அரிசி
ஆலங்குளம் பகுதியில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கி விட்டு, வெம்பக்கோட்டை தாசில்தார் தனராஜ், மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், வட்ட வழங்கல் அதிகாரி சசிகலா ஆகியோர் கல்லமநாயக்கர்பட்டி வழியாக வந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் மறித்து அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மார்த்தாண்டத்தை சேர்ந்த டிரைவர் ராஜேஷ்குமார் (வயது 30) என்பதும், அகேஷ் (20) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை ெசய்த போது அவர்கள் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து அவர்கள் லாரியை சோதனை செய்து பார்த்த போது 179 மூடை ரேஷன் அரிசி மூடைகள் இருப்பதும், அதற்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது.
2 பேர் கைது
இதை தொடர்ந்து 179 மூடை ரேஷன் அரிசியையும் லாரியுடன் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அரிசி மூடைகளை சிவகாசியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமார், அகேஷ் ஆகிய 2 பேரை ைகது செய்தனர்.
Related Tags :
Next Story