நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.3¾ கோடிக்கு மது விற்பனை


நெல்லை மாவட்டத்தில்  ஒரே நாளில் ரூ.3¾  கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 16 Jun 2021 1:03 AM IST (Updated: 16 Jun 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.3¾ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

நெல்லை:

கொரோனா தொற்றுநோய் பரவலை தடுப்பதற்காக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் முழு உரடங்கு பிறப்பித்த நாள் முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின்படி டாஸ்மாக் கடைகள், டீ கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 98 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. அங்கு மது வாங்க கூட்டம் அலைமோதியது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 98 டாஸ்மாக் கடைகள் மூலம் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.3 கோடியே 75 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனை ஆனது.
நேற்று 2-வது நாளாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை நடந்தது. ஏராளமான மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூகவிலகளுடன் மதுபாட்டில்கள் வாங்கிச்சென்றனர்.

Next Story