மாயமான சிறுவன் பிணமாக மீட்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயமான சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தடியன். இவரது மகன் பிரகாஷ் (வயது 6 ). இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையிலிருந்து பிரகாசை காணவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் சிறுவன் அணிந்திருந்த செருப்பு தண்ணீரில் மிதந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தடியன் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரிகள் குருசாமி,அந்தோணிக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி தேடியபோது சிறுவன் பிரகாஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணன் கோவில் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கிணறு உள்ள பகுதிக்கு சிறுவன் எப்படி வந்தான்? கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தானா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story