மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 1:10 AM IST (Updated: 16 Jun 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுரண்டை:

சுரண்டை அருகே சாம்பவர் வடகரையில் மோட்டார்சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் ஆய்க்குடி ரோட்டில் ரோந்து சென்றனர்.

அப்போது அக்ரஹாரத்திற்கு மேல்புறம் சந்தேகப்படும்படியாக நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இடைகாலை சேர்ந்த குமரேசன் (வயது 21), மருதராஜ் (19), இசக்கிசூர்யா (20) என்பதும், சாம்பவர் வடகரை பகுதியில் மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story