திருவோணத்தில், ஜெராக்ஸ் கடையின் கதவை உடைத்து 7 பவுன் நகை - ரூ.50 ஆயிரம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
திருவோணத்தில் ஜெராக்ஸ் கடையின் கதவை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு:-
திருவோணத்தில் ஜெராக்ஸ் கடையின் கதவை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை -பணம் திருட்டு
தஞ்சை மாவட்டம் திருவோணம் சார்பதிவாளர் அலுவலகம் எதிரே அதே ஊரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சாமிநாதன் (வயது 82) என்பவர் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இந்த கடையில் உள்ள பீரோவில் ஆடைகளையும் தனக்கு தேவையான பொருட்களையும் வைத்திருந்தார். மேலும் கடையில் மரத்தால் செய்யப்பட்ட அலமாறி உள்ளது. இதில் 4 மோதிரம், ஒரு செயின் உள்ளிட்ட 7 பவுன் நகைகள் வைத்திருந்தார்.கொரோனா ஊரடங்கு காரணமாக ஜெராக்ஸ் கடை மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கடையின் முகப்பு கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கடைக்குள் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
அதேபோல் இதே பகுதியில் உள்ள சந்திரபோஸ் என்பவரின் வீட்டிலும், செந்தில் என்பவரின் அலுவலகத்திலும் ஓட்டை பிரித்து திருட முயற்சித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரைவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் திருட்டு நடந்த கடையில் இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.
இதுகுறித்து சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெராக்ஸ் கடையின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story