சேலம் மாவட்டத்தில் புதிதாக 759 பேருக்கு தொற்று: கொரோனாவில் இருந்து 1,879 பேர் குணமடைந்தனர்- 24 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் புதிதாக 759 பேருக்கு தொற்று: கொரோனாவில் இருந்து 1,879 பேர் குணமடைந்தனர்- 24 பேர் பலி
x
தினத்தந்தி 16 Jun 2021 4:19 AM IST (Updated: 16 Jun 2021 4:19 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிதாக 759 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,879 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 24 பேர் பலியாகி உள்ளனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 759 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,879 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 24 பேர் பலியாகி உள்ளனர்.
759 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 796 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 759 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 135 பேர் அடங்குவர்.
வீரபாண்டியில் 45 பேர், கெங்கவல்லியில் 38 பேர், ஓமலூரில் 32 பேர், ஆத்தூரில் 30 பேர், மேச்சேரி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 28 பேர், சேலம் ஒன்றியத்தில் 27 பேர், தலைவாசலில் 25 பேர், பெத்தநாயக்கன் பாளையத்தில் 24 பேர், வாழப்பாடியில் 22 பேர், நங்கவள்ளியில் 21 பேர், எடப்பாடியில் 17 பேர், கொளத்தூரில் 14 பேர், அயோத்தியாப்பட்டணம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 13 பேர், சங்ககிரியில் 10 பேர், காடையாம்பட்டியில் 9 பேர், பனமரத்துப்பட்டியில் 8 பேர், நரசிங்கபுரத்தில் 6 பேர், மகுடஞ்சாவடியில் 5 பேர், ஏற்காட்டில் 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
1,879 பேர் டிஸ்சார்ஜ்
இதுதவிர சேலம் மாவட்டத்துக்கு தர்மபுரியில் இருந்து வந்த 26 பேர், நாமக்கல், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த தலா 24 பேர், சென்னை, கடலூரில் இருந்து வந்த 22 பேர், காஞ்சிபுரத்தில் இருந்து வந்த 17 பேர், திருச்சி, கிருஷ்ணகிரியில் இருந்து வந்த 16 பேர், கோவையில் இருந்து வந்த 15 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 13 பேர், வேலூரில் இருந்து வந்த 12 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 912 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,879 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 
தொடர்ந்து 6,780 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
24 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 7 பெண்கள் உள்பட 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 1,290-ஆக அதிகரித்துள்ளது.

Next Story