பணியின் போது தாக்கப்படுவதை கண்டித்து டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்- 18-ந் தேதி நடக்கிறது
பணியின் போது தாக்கப்படுவதை கண்டித்து டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகிற 18-ந் தேதி போராட்டம் நடத்துகிறார்கள்.
சேலம்:
இந்திய மருத்துவர் சங்கத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் 5 ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் டாக்டர் பாலமுருகன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜா செங்கோடன், பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அகில இந்திய போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரகாசம் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-
சமீபகாலமாக டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. டாக்டர்களை தாக்குபவர்களுக்கு 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18-ந் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தப்படும். மேலும் கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story